20 – முறை கர்ப்பம்..! வியக்க வைக்கும் லங்காபாய்..! வயது எவ்வளவு தெரியுமா..?

1204

மகாராஷ்டிர மாநிலம் பீர் மாவட்டத்தை சேர்ந்தவர் லங்காபாய் காரத். இவருக்கு 38-வயதாகியுள்ளார். இவர் குறித்து வெளியான செய்திகள் கேட்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆம், இதுவரை 20-முறை கர்ப்பம் தரித்துள்ளார் இந்த லங்காபாய். மொத்தம் 16 குழந்தைகளை பெற்றெடுத்த லங்காபாய், 3 மாதத்திற்கு ஒரு முறை கர்ப்பம் தரிப்பார் என்று மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இதுவரை பிறந்துள்ள குழந்தைகளில் 11 குழந்தைகள் உயிருடன் இருப்பதாகவும், 5 குழந்தைகள் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், 3 முறை இவருக்கு கருக்கலைப்பும் ஏற்பட்டிருக்கிறது.

அந்தப் பெண்ணின் உடல்நிலை குறித்து சிரத்தையுடன் கவனித்து வருவதாக பீட் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி அசோக் தோரத் தெரிவித்துள்ளார். இதுவரை வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொண்ட லங்காபாய் தற்போதுதான் மருத்துவமனைக்கு வந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement