அரை நிர்வாண கோலத்தில் பெண் சடலம்..! இப்படியொரு கொடூரக்கொலையா..? காரணம் தகாத உறவு..!

1140

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் பச்சகுப்பம் ரயில்வே நிலையம் உள்ளது. இந்த ரயில்வே நிலையத்தின் தண்டவாளத்தில், கடந்த 18-ஆம் தேதி அன்று பெண்ணின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த உடல், இரண்டு கை மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்டும், அரை நிர்வாண கோலத்திலும் இருந்தது. மேலும், கழுத்தில் ஒரு புடவை நெறிக்கப்பட்ட நிலையிலும் அந்த சடலம் இருந்தது.

இதையடுத்து உடற்கூராய்விற்கு சடலத்தை அனுப்பிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கொலையானவர் தஞ்சாவூரை சேர்ந்த சிவரத்தினம் என்பதும், இவர் கணவரைப் பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்தவர் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர், சிவரத்தினத்துக்கும், திருவண்ணாமலையை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்தது என்பதையும், ஏழுமலை சமயபுரத்தில் வேலை செய்யும் போது இருவருக்கும் உறவு ஏற்பட்டதையும் அறிந்தனர்.

பின்னர், ஏழுமலையை பிடித்து போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது, உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த 18-ஆம் தேதி அன்று இருவரும் குப்பம் ரயில் நிலையத்திற்கு சென்றதாகவும், அப்போது இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டதாகவும், இதனால்  கோபத்தில் சிவரத்தினத்தை கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.

newest oldest most voted
Notify of
Ashanmugam
Guest

பாதை மாறி போனால் பயணங்கள் முடிவதில்லை மாறாக விபரீத கொலையில் முடிகிறது. இந்த காலத்து கள்ள காதல் உறவு, ஆசைதீர உல்லாசம் அனுபவித்து கடைசியாக அக்கு வேற ஆணி வேறாக சின்னாபின்னமாகி கொலை செய்கிறான். மீண்டும் ஜாமீனில் வெளி வந்து, விதவை பெண்களை அல்லது கணவரிடம் கருத்து வேறுபாட்டினால் பிரிந்து தனியாக வாழ்வும் பெண்களை கள்ள காதல் மூலம் சகலவித காம லீலைகளை உல்லாசத்தின் உச்ச கட்டம் வரை அனுபவித்து, பிறகு சின்னபின்னமாக கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போவான் மீண்டும் ஜாமீனில் வெளி வருவான் இதான் இந்தியாவின் சட்டம் நீதி ஒழுங்கு பராமரிப்பு. இனி இந்தியாவில் இந்த கொடூர காமவெறி கொலை குற்றங்கள் அதிகரிக்கும். காரணம் நீதிமன்றம், மத்திய அரசு மற்றும் போலீஸ் நிர்வாகம் கொலை குற்றவாளிகளை recycle மூலம் ஊக்குவிக்கின்றனர். இந்த சம்பவங்கள் எல்லாம் அரசியல்வாதிகள், நீதிபதிகள், பிரதமர், ஜனாதிபதி, மந்திரிமார்கள், அரசு ஆணையர்கள், போலீஸ் உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோரின்… Read more »