“2 கோழிகள தின்னது தப்பா.. ஏன் என்ன டார்ச்சர் பண்ற..” மலைப்பாம்பை நோண்டி நொங்கெடுக்கும் வாலிபர்..!

1533

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்று பழமொழி ஒன்று உண்டு. அந்த பழமொழியை போலத்தான், பாம்பை கண்ட பலரும் அஞ்சி நடுங்குவார்கள். காரணம், அதன் நஞ்சுத்தன்மை பொருந்திய பற்கள் தான்.

இவ்வாறு இருக்க தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு நபர் ஆரம்பத்திலிருந்தே ஒரு மலைப்பாம்பை பிடித்துக்கொண்டு, சித்ரவதை செய்கிறார். அதன் வாலை பிடித்து நசுக்குகிறார்.

அதன் வயிற்றில் மிதிக்கிறார். எதற்காக இவர் இப்படி செய்கிறார் என்று யோசித்துக்கொண்டிருக்கும் நிலையில், திடீரென்று, கோழியின் கால்கள் தெரிகிறது. இந்த கோழிக்காக தான் இவர் அந்த பாம்பை இப்படி செய்தாரா என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே, பாம்பின் வயிற்றில் இருந்து மற்றொரு கோழி வந்து விழுகிறது.

இறுதியில் அந்த பாம்பை சித்ரவதை செய்யும் நபர், பாம்பை நேராக தூக்கி, வேறு ஏதேனும் கோழிகள் வருகிறதா என்று பார்க்கிறார். அதோடு அந்த வீடியோ முடிவடைகிறது.

கிட்டதட்ட 2 நிமிடங்கள் வரும் அந்த வீடியோவில், இந்த சம்பவம் எந்த இடத்தில் நடந்தது, எதற்காக இந்த பாம்பை இப்படி செய்தார்கள் என்று எதுவும் கூறப்படவில்லை. பாம்பு என்ற அச்சம் சிறிதுமின்றி இளைஞர் அந்த பாம்பை கையாளும் விதம் அச்சத்துடன், ஆச்சரியத்தையும் ஒருசேர ஏற்படுத்துகிறது.