அண்ணிக்கு வந்த ஆசை..! நெஞ்சை இரண்டாக பிளந்த கொடூரம்..! அதிர்ந்த போலீஸ்..!

1976

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் ஆணின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அந்த உடலை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மிகவும் கொடூரமான முறையில் அந்த கொலை நடத்தப்பட்டிருந்தது.

மார்பில் இருந்து வயிறு வரை உடல்கள் பிளந்துக்காணப்பட்டது. தலையும் இரண்டு துண்டாக பிளக்கப்பட்டிருந்தது. இதனைப்பார்த்து அதிர்ந்துப்போன காவல்துறையினர், அந்த சடலத்தின் தலை துண்டாக வெட்டப்பட்டிருப்பதால், கொலையானவர் யார் என்பதில் குழப்பத்தில் இருந்தனர்.

இதையடுத்து அந்த சடலத்தின் கையில் 2 பெயர் பச்சைக்குத்தப்பட்டிருந்தது. அதில் ஒன்று, கவிதா மற்றொன்று வனிதா. இதில் கவிதா என்ற பெயரில் தா மட்டும் தீயில் கருகி இருந்தது.

இந்த தகவல்களை வைத்து விசாரணையை தொடங்கிய போலீசாருக்கு, கொலையானவர் குமாரப்பாளையத்தை சேர்ந்த சின்ராஜ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து இவரின் நண்பர்கள், உறவினர்கள் என்று நெருங்கிய வட்டாரங்களை போலீசார் விசாரித்து வந்த நிலையில், கூளகுமார் என்பவர் மீது சந்தேகம் எழுந்தது.

அவரைப் பிடித்து கிடுக்குப்பிடி விசாரணையை நடத்திய பிறகு தான், பெரும் பயங்கரம் வெளிச்சத்திற்கு வந்தது. கூளகுமார் அளித்த வாக்குமூலத்தைக் கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.

கூளகுமாரும், சின்ராஜும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். கடந்த சில மாதங்களாகவே இருவரும் ஒன்றாக பழகி வந்துள்ளனர். ஒரு நாள் மதிய விருந்துக்கு சின்ராஜை தனது அண்ணன் வீட்டிற்கு கூளகுமார் அழைத்து சென்றுள்ளார். அப்போது கூளகுமார் அண்ணியிடம், சின்ராஜ் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளார். இதையடுத்து இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்த விஷயம் கூளகுமாரின் வீட்டிற்கு தெரியவே குடும்பத்தில் விரிசல் விழுந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு கூளகுமாரின் அண்ணனை பிரிந்து அண்ணி தனியாக சென்று விட்டதால் அவர்களது குடும்பம் நிம்மதி இழந்தது. இதனால் உறவினர்கள் உன்னால் தான் இவ்வாறு நடந்துவிட்டது என கூளகுமாரை கடுமையாக திட்டியுள்ளனர்.

நட்பாக பழகி துரோகம் செய்த சின்ராஜிடம் கடந்த 20 நாட்களுக்கு முன்பாக இது பற்றி கேட்டு தகராறு செய்துள்ளான் கூளகுமார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில், சின்ராஜ் கூளகுமாரை கடுமையாக தாக்கியுள்ளான். இதற்கு பழிவாங்கவும், துரோகத்திற்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று எண்ணிய கூளகுமார், சின்ராஜுடம் நட்பாக பேசி, மது அருந்த அழைத்து சென்றுள்ளான்.

பிறகு சின்ராஜுற்கு போதை தலைக்கேறிய நிலையில், மார்பில் கத்தியை குத்தி, அதை வயிற்றுப்பகுதி வரை இழுத்து வந்து கொடூரமாக கொலை செய்துவிட்டான். இதையடுத்து தலையை வெட்டிவிட்டு, காவிரி ஆற்றில் வீசியுள்ளான். கூடாய் நட்பு கேடாய் முடியும் என்பதற்கு இதுவே சான்று ஆகும்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of