OLX-ல் பொருட்கள் வாங்குகிறீர்களா..? மக்களே உஷார்..!

1842

சென்னை பெரம்பூர் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் விக்னேஷ். இவர், செகன்ட் ஹேன்ட் செல்போன்களை வாங்குவதற்காக, OLX இணையதளத்தை அனுகியுள்ளார்.

அப்போது அறிமுகமாகிய அரவிந்த், முதலில் 10 ஸ்மார்ட் போன்களை தருவதாகவும், அதற்காக தனது வங்கி கணக்கில் ரூ.1.95 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய விக்னேஷ், அவரது வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தியுள்ளார்.

அதன்பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த விக்னேஷ், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அரவிந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

OLX போன்ற இணையதளங்களை பயன்படுத்தும்போது, அதில் அறிமுகமாகும் நபர்களிடம் கவனமுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால், இதுபோன்ற விளைவுகள் தான் ஏற்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கின்றனர்.