ஹெல்மெட் போடாததற்கு இப்படி ஒரு சோகக்கதையா..? அபராதம் விதிக்காமல் அனுப்பிய போலீஸ்..!

765

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வாகன சட்டம், வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். முன்பு விதிக்கப்பட்ட அபராதத்தை விட தற்போது 10 மடங்கு அதிகமாக விதிக்கப்படுகிறது.

வண்டி விலையை விட அபராதத் தொகையே அதிகமாக இருப்பதால், ஒரு சிலர் வண்டியை அப்படி விட்டுவிட்டு செல்லும் செய்திகள் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வந்துக்கொண்டு தான் இருக்கின்றனர்.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் ஒருவர் ஹெல்மெட் போடாமல் வந்துள்ளார். அவரை போலீஸ்காரர்கள் மடக்கிப்பிடித்து அபாராதம் போட ஆரம்பித்தனர். அப்போது குறுக்கிட்ட அந்த நபர் ஒரு ஏன் ஹெல்மெட் போடவில்லை என்ற காரணத்தை கூறினார். போலீஸ்காரர்களிடம் பேசிய அவர், நான் சட்டத்தை மதிப்பவன்.

என்னிடம் வாகனம் தொடர்பான அணைத்து வகையான ஆவனங்களும் உள்ளது. தான் நிறைய கடைகளுக்கு சென்றுவிட்டேன், இருப்பினும் என் தலையின் அளவிற்கு ஹெல்மெட் கிடைக்கவில்லை. இந்த ஹெல்மெட் விஷயத்தில் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை.

இதனைக்கேட்ட காவலர்கள் அவருக்கு அபராதம் விதிக்காமல் அனுப்பி விட்டனர். இதுதொடர்பாக பேசிய காவலர், அவரின் நிலவரத்தை நாங்கள் புரிந்துக்கொண்டோம். அதனால் நாங்கள் அவருக்கு அபராதம் விதிக்கவில்லை என்று தெரிவித்தார்.