சட்டவிரோதமாக சூதாட்டம்..! போலீஸ் சோதனையின் போது தப்ப முயன்றவர் பரிதாப பலி..!

470

சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் பாலகிருஷ்ணா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சட்டவிரோதமாக சூதாட்ட விடுதி நடைப்பெறுவதாக போலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து போலிசார் நடத்திய சோதனையின் சூதாட்ட விடுதியில் இருந்து 15க்கும் மேற்பட்டோர் தப்பியோடினர். அதேசமயம் அங்கு இருந்து தப்ப முயன்ற பீட்டர், செழியன், ராஜி, சந்திரசேகர், ஆகிய நான்கு பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின் வழக்கு பதிவு செய்து தங்கள் சொந்த ஜாமினில் விடுவித்தனர். மேலும் சூதாட்ட விடுதியின் அருகே அடையாளம் தெரியாத நபர் விழுந்து கிடப்பதாக காவல்துறை தகவல் கிடைத்தது பின் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார், பின் விசாரணையில் அவர் சௌகார்பேட்டையை சேர்ந்த குமார், என்பதும் சூதாடிய போது போலிசாரின் சோதனைக்கு பயந்து இரண்டாவது மாடியில் இருந்து விழுந்ததும் தெரியவந்தது.

Advertisement