“குழந்தைக்கு பேய் பிடிச்சிருக்கு..” 3 வயது சிறுமியை கொன்ற பூசாரி..!

2200

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியில் உள்ள அஜ்ஜிகாட்டனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரவின்-ஷியாமலா தம்பதி. இவர்களுக்கு, 3 வயதில் பூர்விகா என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த சில தினங்களாக, சரிவர உணவு உண்ணாமலும், தூங்காமலும் பூர்விகா இருந்திருக்கிறாள்.

இதனால் சோகமடைந்த சிறுமியின் பெற்றோர், அப்பகுதியில் உள்ள பூசாரி ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளனர். அவர் குழந்தைக்கு பேய் பிடித்துவிட்டதாகவும், பூஜை செய்தால் சரியாகிவிடும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு ஒத்துக்கொண்ட சிறுமியின் பெற்றோர், பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது, சிறுமியை பூசாரி பிரம்பால் சரமாரியாக தாக்கியதில், குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த பூசாரியை கைது செய்தனர்.

Advertisement