“நீ எப்படி அப்படியெல்லாம் சொல்லுவ..” மனைவிக்காக நண்பனை கொன்ற நபர்..! கைது செய்த போலீஸ்..!

561

சென்னை, ராயப்பேட்டை பெசண்ட் சாலை பகுதியை சேர்ந்தவர் நாசர் அலி. இவர் நேற்றிரவு சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த போது, அலிஷர் என்பவர் கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

அப்போது நாசர் அலியும், அலிஷரும் நல்ல நண்பர்கள் என்பதும், அலிஷரின் மனைவியை பற்றி நாசர் அவதூறாக பேசியதால் இந்த கொலை நடந்ததும் தெரிய வந்தது.

பின்னர், அண்ணாசாலை போலீசார் அலிஷர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மனைவியை பற்றி அவதூறாக பேசியவரை, கணவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of