“உனக்கொரு வாய்.., எனக்கொரு வாய்..” “அதெல்லாம் முடியாது..” குளோஸ் Friend-ஐ குளோஸ் செய்த நபர்..!

814

புதுச்சேரியில் அய்யங்குட்டிப்பாளையம் அருகே உள்ள தருமாபுரி கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அஜித். இவரும், அதே பகுதியை சேர்ந்த திருமூர்த்தி மற்றும் மதுபாலன் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள்.

இந்நிலையில் இந்த 3 பேரும் டைமன் நகர் பகுதியில் மது அருந்திக்கொண்டிருந்தனர். பின்னர் மதுபாலன் நேரமாகிவிட்டதால் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களிடம் 2 மதுப்பாட்டில்கள் இருந்துள்ளது.

அதனைப்பங்குப்பிரித்துக்கொள்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றிய நிலையில், போதையில் இருந்த திருமூர்த்தி தான் வைத்திருந்த கத்தியால் அஜித்தை குத்தினார்.

இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த அஜித், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், திருமூர்த்தியை கைது செய்தனர்.

மதுவை பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட தகராறில், நெருங்கிய நண்பனை நண்பனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement