“இது தான் கடைசி இரவு..” மனைவி சொன்ன அந்த வார்த்தை..! பதட்டத்தில் கணவன் செய்த கொடூரம்..!

1346

உத்தரபிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவருக்கும் நீலம் என்ற பெண்ணிற்கும் இடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், ராஜு துபாயில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த தம்பதியினருக்கு சொந்தமாக கோடா என்ற பகுதியில் வீடு ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த வீட்டை விற்கப்போவதாகவும், எனவே வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும் தனது மருமகளிடம், ராஜுவின் தாய் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இதையடுத்து ராஜு ஊர் திரும்பினார். அவருக்கும், இந்த வீடு விற்பனை விஷயம் தொடர்பாக மனைவியிடம் தகராறு ஏற்பட்டது. மேலும், மனைவி நீலத்திற்கு வேறொரு நபருடன் கள்ளக்காதல் இருப்பதாகவும், அவர் சந்தேகம் கொண்டார். இந்நிலையில் இருவருக்குள்ளும் கடந்த 8-ஆம் தேதி அன்று சண்டை ஏற்பட்டது.

இந்த சண்டையின் போது, இன்றைக்குத் தான் உனக்கு கடைசி இரவு. அடுத்த நாள் நீ உயிரோடு இருக்க மாட்டாய் என்று கூறி மிரட்டினார். இதனால் பதட்டத்தில் இருந்த கணவன், தன்னை ஆள் வைத்து கொலை செய்ய மனைவி திட்டமிட்டிருப்பதாக நினைத்துக்கொண்டு, தனது மனைவியை கொலை செய்தார்.

இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜுவை தேடி வந்த நிலையில், அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.