“வீட்டை காலி செய்றியா இல்லையா..” தகராறு செய்த ஓனர்..! போட்டுத்தள்ளிய தம்பதி..!

700

சென்னை ஆவடி அருகே உள்ள பண்ணை வீடு ஒன்றில் வசித்து வந்தவர் ஜெகதீசன். 67 வயதாகும் இவருக்கு, விலாசினி என்ற மனைவி உள்ளார். ஜெகதீசன் தனது பண்ணையை பார்த்துக்கொள்வதற்கு, சுரேஷ் என்ற நபரை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

மேலும், சுரேஷிற்கு கல்யாணம் ஆகி குழந்தை இருப்பதால் வீடு ஒன்றையும் கட்டிக்கொடுத்து, அங்கேயே தங்கி இருந்து பண்ணையை பார்த்துக்கொள்ளும்படி கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் 27-ந் தேதி அன்று ஜெகதீசனுக்கு தெரிந்தவர் ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது, ஜெகதீசனும், அவரது மனைவி விலாசினியும் ரத்த வெள்ளத்தில் மிதந்த நிலையில் உயிரிழந்துக்கிடந்துள்ளனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரை ஜெகதீசன் பணியில் அமர்ந்தியிருந்ததாகவும், அவர் தற்போது குடும்பத்தோடு தப்பியோடியுள்ளதால் அவர் கொலை செய்திருக்கலாம் என்றும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் ஆந்திராவில் சுரேஷின் வீட்டிற்கு சென்று அங்கு விசாரணை நடத்தினர். இதில் சுரேஷ் ஹரித்துவாரில் இருப்பது தெரிய வந்தது. பின்னர் கடந்த 2-ஆம் தேதி அன்று போலீசார் ஹரித்துவார் சென்று, அங்கு ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த சுரேஷை மடக்கி பிடித்தனர்.

பின்னர், அவர் மற்றும் அவரது மனைவி, குழந்தையை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், ஜெகதீசன் குடித்து விட்டு என்னிடம் தகராறு செய்தார். பின்னர் வீட்டை விட்டு வெளியே போ என்று கூறினார்.

இதனால் ஆவேசம் அடைந்து அவரின் தலையில் இரும்பு ராடால் அடித்து கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந் நகை மற்றும் ரெக்கப்பணத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டோம் என்று கூறினார்.

ஏற்கனவே, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 20-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் சுரேஷ் மீது இருப்பதும், அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, கோர்டில் ஆஜர் படுத்தும் போது தப்பி சென்னைக்கு வந்து ஜெகதீசன் வீட்டில் வேலைக்கு சேர்ந்ததும் தெரியவந்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of