“அது தேசியக்கொடிப்பா..? அட போங்க பாஸ்..!” ஜோதிபாசு செய்த மோசமான செயல்..!

656

தேசியக்கொடியை அவமரியாதை செய்வது தேசவிரோத செயலாக பார்க்கப்படுகிறது. தேசியக்கொடிக்கான மரியாதை அளிக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் சட்டம் உள்ளது.

ஒரு சிலர் அரசின் மீது உள்ள எதிர்ப்பை காட்ட தேசியக்கொடிகளை அவமரியாதை செய்து வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்டம் போடியில் வசித்து வருபவர் ஜோதிபாசு. மக்கள் அதிகாரம் அமைப்பின் நகர பொறுப்பாளராக இருக்கும் இவர், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை மத்திய நீக்கியதற்கு கடும் கண்டம் தெரிவித்தார்.

மேலும், பிரதமர் மோடி கழிவறையில் அமர்ந்திருப்பது போலவும் டிஸ்யூ பேப்பர் இருக்கும் இடத்தில் தேசியக் கொடி இருப்பது போலவும் வரையப்பட்ட கார்டூன் ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனை அறிந்த பா.ஜ.க நகர பொறுப்பாளார் தண்டபாணி, ஜோதிபாசு மீது நடவடிக்கை எடுக்கும் படி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஜோதிபாசுவை கைது செய்து மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of