“லொள்ளா..” வீட்டில் திருடிய மனைவி..! விசாரணையில் பெண் போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

257

உகாண்டா நாட்டின் காயுங்கா என்ற மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது முதும்பா. இவருக்கும் ஸ்வபுல்லா நபுகீரா என்ற பெண்ணிற்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இறுதியில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டு தங்களது வாழ்க்கை பயணத்தை தொடங்கினர்.

இவ்வாறு சென்றுக்கொண்டிருந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது, முதும்பாவின் மனைவி வீட்டில் இருந்த பொருட்களை திருடிக்கொண்டு வீட்டை விட்டு தப்பியோடியுள்ளார். இதையடுத்து முதும்பா அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இறுதியில் நபுகீராவை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அந்த நாட்டின் வழக்கப்படி, பெண் கைதிகளை பெண் போலீஸ் மட்டுமே விசாரிக்க வேண்டும். அதன்படி, பெண் அதிகாரி ஒருவர் நபுகீராவை விசாரிக்கத் தொடங்கினார். இறுதியில் நபுகீரா ஒரு பெண்ணே கிடையாது என்றும், அவர் பெண் வேடமிட்டு ஆண்களிடம் கொள்ளையடிக்கும் திருடன் என்பதும் தெரியவந்தது.

இதனை அறிந்த முதும்பா பெரும் அதிர்ச்சியடைந்தார். இதனைத்தொடர்ந்து நபுகீரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of