மயானத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதால் பரபரப்பு

103

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள போடுச்சிப்பள்ளி கிராமத்தில், குறிப்பிட்ட பிரிவினருக்கு சொந்தமான மயானம் உள்ளதாக தெரிகிறது.

இந்த மயானத்தின் ஒருபகுதியை, தனிநபர் ஒருவர் கம்பி வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்த கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இருதரப்புக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனையடுத்து, நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சி கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

Advertisement