மூளையில் ஆபரேஷன் செய்தபோது.. பிக்-பாஸ் நிகழ்ச்சி பார்த்த நோயாளி..

59005

ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்தவர் வர பிரசாத். 33 வயதான இவருக்கு, மூளையில் கட்டி இருந்ததால், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அந்த அறுவை சிகிச்சை செய்யும்போது, நோயாளி முழித்திருக்க வேண்டுமாம்.

மூளையில் அறுவை சிகிச்சை செய்யும்போது, முழித்திருந்தால், யாராக இருந்தாலும், பதற்றம் அடைவார்கள் என்பதால், பிக்-பாஸ் நிகழ்ச்சியையும், அவதார் திரைப்படத்தையும் ஆபரேஷன் தியேட்டரில் மருத்துவர்கள் திரையிட்டுள்ளனர்.

அதனை வர பிரசாத் பார்த்துக்கொண்டிருந்து நேரத்தில், மொத்த அறுவை சிகிச்சையும் செய்து முடித்துள்ளனர். தற்போது பழைய நிலைக்கு வரபிரசாத் திரும்பியுள்ள நிலையில், அதுதொடர்பான புகைப்படமும் வைரலாகி வருகிறது.

Advertisement