தமிழ் ராக்கர்ஸில் படம் பார்த்துவிட்டு ரசிகர் செய்த செயல்! புல்லரித்து போன இயக்குநர்!

2384

புதுமுக இயக்குநர் செல்வக்கண்ணன் இயக்கிய நெடுநல்வாடை என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குநர் செல்வக்கண்ணன், அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், நெடுநல்வாடை சில விசித்திர அனுபவங்களை தந்திருக்கிறது.

அந்த அனுபவங்களில் இதுவும் ஒன்று. மலேசியாவில் இருந்து ஒரு நபர் இந்தப் படத்தை தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் பார்த்துவிட்டு இவ்வளவு நல்ல படத்தை ஓசியில் பார்த்தது குற்ற உணர்ச்சியாக உள்ளது என்று செய்தி அனுப்பி என்னை வற்புறுத்தி அக்கவுண்ட் எண் வாங்கி பணம் அனுப்பி வைத்திருக்கிறார்.

வாழ்க அவரது நேர்மை என்று பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவை கண்ட பலரும், இதேபோன்ற உணர்வு தான் தங்களுக்கும் ஏற்பட்டது என்று தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of