திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் கஜா புயல் குறித்த முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

1160

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை மற்றும் கஜா புயல் குறித்த முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை முதன்மை செயலாளர் மணிவாசன், திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு 10 குழுக்களும் , வட்டார வாரியாக 10 வெள்ளத் தடுப்பு குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.

மாவட்டம் முழுவதும் 212 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு 249 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், பொதுப்பணித்துறை மூலம் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 500 மணல் மூட்டைகள், 18 ஆயிரத்து 325 காலி சாக்குகள் உட்பட ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதனை அடைப்பதற்கான தளவாட பொருட்களும் தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.

Advertisement