மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் – சோனியாகாந்தி

317

பொருளாதார மந்த நிலைக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து, நாடு முழுவதும் அக்டோபர் 15 ம் தேதி முதல் 25 ம் தேதி வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

புதுடெல்லியில் சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மாநில தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மகாத்மா காந்தியின் 150 வது ஆண்டு பிறந்த நாள் விழா 3 மாநில தேர்தல் யுக்தி கட்சி வளர்ச்சி பணி  உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் நிர்வாகி கே.சி. வேணுகோபால் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் நடத்தும் போராட்ட அறிவிப்பை வெளியிட்டார்.