ஒரு நிமிடத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து குத்துச்சண்டை வீரர் விளையாட்டு உலகில் புதிய சாதனை

615

மெக்சிகோ நாட்டின் குத்துச்சண்டை வீரர், ஒரு நிமிடத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து விளையாட்டு உலகில் புதிய சாதனை படைக்கவுள்ளார்.

மெக்சிகோ நாட்டின் முன்னணி குத்துச்சண்டை வீரர் “சால் கானலோ அல்வரேஸ்” உலகின் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் வரிசையில் புதிய சாதனையை நிகழ்த்தவுள்ளார்.

இந்த வீரர்,  ஒரு ஒளிபரப்பு நிறுவனத்தோடு கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தப்படி, சுமார் 365 மில்லியன் டாலர் ஊதியம் பெறவுள்ளார். விளையாட்டு உலகத்தில் இதுவே அதிக மதிப்புடைய ஒப்பந்தம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் நடக்கும் 11 போட்டிகளுக்கு, அல்வரேஸுடன், இந்த நிறுவனம் 365 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை போட்டுக் கொண்டுள்ளது.

இதன் மதிப்பு இந்திய ரூபாய்ப்படி சுமார் 2 ஆயிரத்து 700 கோடி ரூபாயை எட்டும் நிலையில், அல்வரேஸ் 1 நிமிடத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறுகிறார்.

மெஸ்ஸி, நெய்மர் போன்ற கால்பந்து நட்சத்திரங்கள், 350 மில்லியன் டாலர் வரை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதே அதிகம் என்று கூறப்படுகிறது.

அவர்களை விட அதிகமான மதிப்பிற்கு ஒப்பந்தம் செய்துள்ள அல்வேரஸ் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of