பூட்டான் நாட்டில் சீனா உருவாக்கும் ஒரு புதிய கிராமம்..? அதிர்ச்சியில் அண்டை நாடுகள்

18366

டுவிட்டரில் டிரெண்டாகும் பூட்டான்ன்.. ஏன் டிரெண்டாகிறது.. இதற்கு யார் காரணம். சீனா தனது அண்டை நாடுகளுடன் சண்டையிட்டு எல்லை ஆக்கிரமிக்க பல முயற்சிகள் எடுத்து வருகிறது..

இந்நிலையில்கடந்த சில நாட்களில் இந்தியாவுடனும் சீனா மோதி தற்போது எல்லை குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது.சீனாவின் அடுத்த அண்டை நாடான பூடான்.. இங்கு டோக்லாம் பகுதியில்  சீனா புதிய கிராமத்தை உருவாக்கியது சர்ச்சைஏற்படுத்தியுள்ளது..

அந்த கிராமத்தின் புகைப்படங்கள் சீனாவின் ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமம் பூட்டான் நாட்டின் எல்லை பகுதியில் இருப்பதால் அந்நாட்டின் அனுமதி பெற்று சீனா உருவாக்கியதா…? என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.

இந்த கிராமத்தில் இருந்து 9 கீ.மீ தொலைவில் இந்தியா-சீனாவுக்கும் இடையே 2017 ஆம் ஆண்டு மோதல் ஏற்ப்பட்டது குறிப்பிடத்தக்கது.  சீனா பூட்டானை ஆக்கிரமித்து இந்தியாவை அச்சுருத்த இந்த ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிகிறது..

பூட்டானின் ராணுவம் சிறிய அளவில் இருப்பதால் பூட்டானுக்கு இந்தியா தான் உதவி செய்து கொண்டு வருகிறது. இதனால் இந்திய தூதர் பூட்டானிடம் கேட்ட போது பூடானில் சீனாவுக்கு சொந்தமான இடம் ஒன்றும் இல்லை என்று பூட்டான் தூதர் தெரிவித்துள்ளார்.

ஆனால் சமூக வலைத்தளத்தில் வெளியான புகைப்படங்கள் குறித்து பலரும்

கேள்வியெழுப்பி கொண்டு இருக்கின்றனர்.. ராணுவத்திற்கு யோசனை சொல்லும் விதமாக பலரும் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவிக்கின்றனர்.. உண்மையில் சீனா கிராமத்தை உருவாக்கிருக்கலாம்..

என்றும் சீனா அண்டை நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கலாம் என்றும்.. இது எல்லையை ஆக்கிரமிக்க துடிக்கும் சீனாவின் அராஜகத்தை காட்டுகிறது. என்றும் இதானால் இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் பலர் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement