ஆற்றில் குதித்து மாயமான நபர் – இரு தினங்களுக்கு பின் உயிருடன் மீட்பு

369

கர்நாடகாவில் ஆற்றில் குதித்து மாயமான நபர் இரு தினங்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள நஞ்சன்கூடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் பூஜாரி. இவர் கடந்த சனிக்கிழமை மாலை, ரயில்வே மேம்பாலத்தில் இருந்து பெருக்கெடுத்து ஓடிய ஆற்றில் சாகசத்திற்காக குதித்துள்ளார்.

இதில் ஆற்றில் அடித்து செல்லப்பட் அவரை மீட்பு படையினர் தீவிரமாக தேடி வந்தனர். இரண்டு நாட்களாக அவர் கிடைக்காததால் உயிரிழந்திருக்கலாம் என கருதப்பட்டது.

இந்நிலையில் வெங்கடேஷ் பூஜாரி இரண்டு தினங்களுக்கு பின், ஆற்றங்கரையோரம் லேசான காயங்களுடன் மயக்கமான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். போலீசார் அவரை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.