விமானத்தை எதிர்த்து ஓடுதளத்தில் நடந்து வந்த நபரால் பரபரப்பு

507

விமானத்தை எதிர்த்து ஓடுதளத்தில் நடந்து வந்த நபரால் பரபரப்பு 

மும்பை விமானநிலையத்தில் ரன்வேயில் சென்ற விமானத்தின் எதிர் புறம் நடந்து வந்த மர்ம நபரால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

26 வயதான ஒருவர் இன்று மும்பை விமான நிலையத்தின் சுற்றுச் சுவர் மீது ஏறி விமான நிலைய ஓடுபாதையில்  நடந்து சென்றுள்ளார்.

அப்போது அங்கு நின்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் அருகில் நடந்து சென்று அந்த விமானத்தை தொட்டு பார்த்து ஆய்வு செய்வது போல நடந்து கொண்டுள்ளார். அந்த மர்மநபால் விமானநிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை கண்ட Central Industrial Security Force என்று அழைக்கப்படும் CISF வீரர்கள் ஓடுபாதைக்கு விரைந்து துப்பாக்கி முனையில் அந்த மர்மநபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவரை போல தோற்றமளிப்பதாக CISF அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of