பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் மர்ம நபர் – சிசிடிவி காட்சி

302

கடலூர் அருகே வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை பட்டப்பகலில் மர்ம நபர் ஒருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கடலூர் – பண்ரூட்டி சாலை பட்டாம்பாக்கம் பகுதியில் நவாஸ் என்பவர் தனது வீட்டு வாசலில் இருசக்கர வாகனம் நிறுத்திவிட்டு உள்ளே சென்றிருந்தார்.

பின்னர் வெளியே வந்துபார்த்தபோது, வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சியை பார்த்தபோது, மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் நவாஸ் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபரை  தேடி வருகின்றனர்.

Advertisement