கொரோனாவில் இருந்து மீண்ட கர்ப்பிணி பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

323

டெல்லியில் கடந்த மாதம் 11ம் தேதி 24 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கடந்த மாதம் 25ம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில் கடந்த புதன் கிழமை இரவு கர்ப்பிணிக்கு சுகப் பிரசவத்தில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 6 மணி நேரத்தில் ஆர்டி-பி.சி.ஆர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில், குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே குழந்தை நலமாக உள்ளது என்றும், குழந்தைக்கு கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து குணமடைந்த தாய்க்கு, கொரோனா பாதிப்பு இருக்கும் குழந்தை பிறந்திருப்பது இதுவே முதல் முறை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of