என்னது போனஸ் 70 கோடியா ? உறைந்துபோன ஊழியர்கள் | 70 Crores Bonus

565

மேலைநாடுகளில், தேங்க்ஸ் கிவ்விங், ஹாலோவீன், என்று டிசம்பர் மாதம் முழுவதும் கொண்டாட்டங்கள் நிறைந்திருக்கும். இந்நிலையில் ‘செயிண்ட் ஜான் பிராப்பர்ட்டீஸ்’ இது அமெரிக்காவில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனம், இந்த நிறுவனம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தனது நிறுவனத்தில் வேலைபார்க்கும் அணைத்து ஊழியர்களுக்கு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

அதில் பங்கேற்ற சுமார் 200 ஊழியர்களுக்கு சிவப்பு நிற உறைகள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து ஊழியர்களின் மத்தியில் அந்த நிறுவனத்தின் தலைவர் உரையாற்றினார், அப்போது பேசிய அவர் ஊழியர்களிடம் இருந்த சிவப்பு பையை திறந்து பார்க்க சொன்னார்.

அதன்படி அந்த உறைகளை பிரித்து பார்த்த ஊழியர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த உறைகளில் அவரவருக்கான கிறிஸ்துமஸ் போனஸ் தொகை கொடுக்கப்பட்டிருந்தது.

ஊழியர்களின் பணி அனுபவத்திற்கு ஏற்ப சுமார் 100 டாலர் முதல் அதிகபட்சமாக 2 லட்சத்து 70 ஆயிரம் டாலர்கள் வரை வழங்கப்பட்டது.

இப்படி ஒட்டு மொத்தமாக 200 ஊழியர்களுக்கு 10 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.70 கோடியே 68 லட்சத்து 50 ஆயிரம்) போனஸ் வழங்கப்பட்டு உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of