A.R.முருகதாஸ் போட்ட டுவீட்..! குஷியில் அனிருத் ரசிகர்கள்..! கூடவே ரஜினி ரசிகர்களும்..!

326

கனவே கனவே களைவதேனோ என்ற திரைப்படத்தின் பாடல் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானவர் அனிருத். இந்த பாடலைக்கேட்டால், காதலை பிரிந்த காதலர்களின் கண்களில், கண்ணீர் தென்படும். அந்த அளவிற்கு, அனிருத் அவரது குரலின் மூலம் ஜாலம் செய்திருப்பார்.

அந்த பாடல் வெளியாகி பல ஆண்டுகள் ஆனாலும், அது பலரின் ரிங்டோனாக இன்னமும் இருந்து வருகிறது. இதனையடுத்து, அவர் இசையமைத்த, 3 படத்தில் இடம்பெற்ற வெய் திஸ் கொலவெறி உலக அளவில் மாபெரும் ஹிட் அடித்தது.

இதனைத்தொடர்ந்து அவர் இசையமைத்த அத்தனை திரைப்படங்களும் வேறலெவலுக்கு சென்றது. அனிருத் ஒரு பாடலை பாடினாலே அது ஹிட் தான் என்ற அளவுக்கு அவர் உச்சத்தில் இருந்தார். அதன்பிறகு, சிம்புவுடன் இணைந்து, ஒரு பாடல் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

தற்போது மீண்டும் வந்து ஒரு கலக்கு கலக்கிக்கொண்டிருக்கிறார். இன்று அவரது பிறந்த நாளை நெட்டிசன்களும், ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அவரது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை போட்டுள்ளார்.

அதில்,

“நண்பர்களே, அனிருத் தர்பார் படம் குறித்து ஒரு அப்டேட்டை தருவார்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனிருத்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் ரஜினி மற்றும் அனிருத் ரசிகர்கள் படுகுஷியில் உள்ளனர்.