இஸ்ரோ விஞ்ஞானிகள்..! தனது ஸ்டைலில் ஆறுதல் கூறிய ARR..!

360

சந்திரயான் -2 வின் விக்ரம் லேண்டர் இன்று அதிகாலை 1மணியிலிருந்து 2மணிக்குள் நிலவின் தென்துருவப்பகுதியில் தரையிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விக்ரம் லேண்டர் திரையிறக்கும் நேரத்தில், அதன் உடனான இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

இஸ்ரோ விஞ்ஞாணிகள் சோகமாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு முக்கிய அரசியல் தலைவர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை போட்டுள்ளார்.

அதில், “எல்லோரும் உங்களோடு தான் உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

எப்போதும் சில வார்த்தைகளை மட்டும் பேசும் ஏ.ஆர்.ரகுமான், டுவிட்டரில் தனது ஆறுதலையும் அதே பாணியில் கூறியுள்ளார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of