அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன்..!

550

காஞ்சிபுரத்தில் இருந்து செல்லம்பட்டி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில் பள்ளி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே பயணம் செய்தனர்.

பொன்னேரிக்கரை அருகே சென்றபோது படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவன் ஒருவன் சாலையில் தவறி விழுந்தான். இந்தக் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரத்தில் இருந்து அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement