கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை தனி வகுப்பறையில் அமரவைத்ததாகப் புகார்…

82

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தாலுகா சீக்கனாங்குப்பம் பகுதியில் இயங்கி வரும் மார்க் நவஜோதி வித்யாலயா சி.பி.எஸ்.சி பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

மூன்று பருவங்களாக கல்விக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்று கூறப்படும் நிலையில், சில மாணவர்கள் 2 பருவ கட்டணம் செலுத்திவிட்டு மூன்றாம் பருவ கட்டணத்தை செலுத்தால் இருப்பதாக கூறப்படுகிறது.

அவ்வாறு கட்டணம் செலுத்தாத மாணவர்கள் 25 பேரை கடந்த சில தினங்களாக பள்ளி நிர்வாகம் அங்குள்ள நூலக அறையில் அமரவைத்து, அவர்களுக்கு பாடங்கள் நடத்தாமல் புறக்கணித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையறிந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் பெற்றோரின் இந்தக் குற்றச்சாட்டை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது.