சாலையின் நடுவே திடீரென பள்ளம் – பரபரப்பு சம்பவம்

111

சென்னை எம்.ஜி.ஆர் நகர் – அண்ணா பிரதான சாலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு தீடீரென பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தை மாநகராட்சி ஊழியர்கள் மண் கொட்டி தற்காலிகமாக மூடினர்.

இந்நிலையில், அதேபகுதியில் சாலையின் நடுவிலே திடீரென பள்ளம் விழுந்துள்ளது. இந்த பள்ளத்தின் அருகே வாகனங்கள் சென்றால் அதன் ஆழம் மேலும் அதிகரிக்கிறது. போலீசார் பேரிகார்டுகள் அமைத்து போக்குவரத்தை தடை செய்துள்ளனர்.

இதனால் எம்.ஜி.ஆர் நகர் – அண்ணா பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தை சரி செய்வதற்கான பணிகள் நாளை நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of