தனியாக இருந்த கல்லூரி மாணவி..! 15 வயது சிறுவன் செய்த விபரீதம்..! அதிர்ந்த போலீஸ்..!

955

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பில் பி.டெக் படிக்கும் கல்லூரி மாணவி குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் தனியாக இருக்கும் போது வீட்டிற்குள் வந்த 15 வயது சிறுவன் ஒருவன், அந்த மாணவியை கத்தியால் குத்தினான்.

இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த மாணவி, வலி தாங்காமல் கத்தினார். இதையடுத்து அச்சமடைந்த அந்த சிறுவன் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளான். பிறகு சத்தம் கேட்ட அங்கு வந்தவர்கள், இளம்பெண்னை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிறகு யார் இந்த கொடூரத்தை செய்தார்கள் என்று அக்கம் பக்கத்தினர் குழப்பத்தில் இருந்த நிலையில், 8-வது மாடியில் இருந்து, அந்த சிறுவன் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டான்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அந்த சிறுவன் எதற்காக கொலை செய்தான் என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.