பயங்கரவாதிகளின் ரகசிய பதுங்கு குழி கண்டுபிடிப்பு

242

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் குங்னு கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து  மாநில போலீசார் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பதுங்கு குழியை கண்டுபிடித்தனர்.மேலும் அங்கிருந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவான துண்டுப் பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.