திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் பழனி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது சந்தேகத்திற்கிடமான இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரித்த போது, அல் ஆசிக் என்பவர் கத்தி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை தனது வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றார்.
ஆனால் அதற்கு அந்த நபர் ஒத்துழைக்காததால் இருவருக்கும் இடையே சாலையிலேயே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து போலீசாருக்கு சவால் விட்ட அந்த நபர் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போது வெகு சாதாரணமாக தப்பிச் சென்றார்.