தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை..! ஆதார் கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு

111

சென்னை: தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள ஆதார் எண் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் உள்ள தனியார் ஆய்வகங்கள், கொரோனா பரிசோதனை செய்பவர்களிடம் ஆதார் எண், பெயர், மொபைல் எண், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெற வேண்டும்.

ஆதார் இல்லாதபட்சத்தில், முடிவுகள் வரும் வரை தனிமைப்படுத்தி கொள்ள அறிவுரை வழங்க வேண்டும். கொரோனா பரிசோதனைக்கு வருவோரின் மொபைல் எண்ணை உறுதி செய்த பின்னரே அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

இது குறித்த விவரங்களை சுகாதாரத்துறை, சென்னை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை அனைத்து தரப்பினரும் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of