ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் – தேர்தல் ஆணையம் கடிதம்

221

வாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

வாக்காளர் பட்டியலை சீர் செய்வதற்கு வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண்களை கேட்டுப்பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம்  விரும்புகிறது. ஆனால் இதற்கு தேர்தல் ஆணையத்திற்கு  தற்போது அதிகாரம் இல்லை. இந்த நிலையில், மத்திய அரசின் சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம்  கடிதம் ஒன்றை எழுதி உள்ளது.

வாக்காளர்கள் ஆவதற்கு புதிதாக விண்ணப்பிப்பவர்களிடமும், ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களிடமும் ஆதார் எண்களை கேட்டுப்பெறுவதற்கு சட்டப்பூர்வ அனுமதி வேண்டும் என்றும், அதற்கு ஏற்ற வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை திருத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்று, வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைப்பதற்கு தடையாக அமைந்து விட்டது.  இந்த நிலையில்தான் வாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப் பெறுகிற வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை திருத்தவேண்டும் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of