சி.பி.எஸ்.இ, நீட் தேர்வுகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது – உச்சநீதிமன்றம்

701

சி.பி.எஸ்.இ, நீட் தேர்வுகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துளள்து.

கல்வி என்பதை அடிப்படை உரிமை என்பதால் அதில் ஆதாரை கொண்டு வரக்கூடாது என்றும்,ஆதார் எண் இல்லை என்பதற்காக குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அடிப்படை விஷங்களை மறுக்கக்கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்தியாவில் அதிகம் விவாதிக்கப்பட்ட விஷயம் ஆதார் என்றும் தனி மனிதர்களின் அடையாளத்துக்கு ஆதார் கட்டாயம் என்றும் அரசின் சேவைகளை பெற ஆதார் மிகவும் பயனுள்ளதாக இருப்பதால், ஆதார் எண் கட்டாயம் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், வங்கிக்கணக்குகளை தொடங்கவும், மொபைல் எண் பெற ஆதார் கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளார். பான் எண்ணோடு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் விவரங்களை தரக்கூடாது என்றும் குறைத்த பட்ச தகவல்கள் மட்டுமே ஆதார் எண்ணுக்காக பெறப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆதாரால் வரும் பாதகங்களை விட சாதகங்களே அதிகம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆதார் விவரங்களை பாதுகாக்க வலுவான பாதுகாப்புகள் தேவை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement