இனி ஆதார் எண் கட்டாயம் – ஜனாதிபதி ஒப்புதல்

419
ஆதார் எண் கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட பெஞ்ச் கடந்த ஆண்டு தீர்ப்பு அளித்தது. இருப்பினும், வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுகளுக்கு ஆதார் எண் இணைப்பது கட்டாயம் அல்ல என்று கூறியது.
இந்நிலையில் வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுகளுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கு மீண்டும் சட்ட அங்கீகாரம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக டெலிகிராப் சட்டத்திலும் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுகளுக்கு இனி ஆதார் எண் கட்டாயம் என்ற அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of