அரசு நலத் திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

355
supreme-court

தனிமனித சுதந்தரத்தில் தலையீடு என குற்றம் சாட்டப்பட்ட ஆதார் அட்டை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏஎம் கான்வில்கர், ஏ.கே சிக்ரி மற்றும் அசோக் பூஷன், சந்திரசூட் ஆகியோர் அடங்கி அமர்வில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அதில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏஎம் கான்வில்கர், ஏ.கே சிக்ரி ஒரே தீர்ப்பை அளித்து உள்ளனர். நீதிபதி சிக்ரி 40 பக்கம் கொண்ட தீர்ப்பை வாசித்தார். ஆதார் எண் அரசு சேவைகளுக்கு கட்டாயம் என்று நீதிபதிகள் அதிரடி உத்தவிட்டனர்.

3 நீதிபதிகளின் தீர்ப்பில், ஆதாருக்காக குறைந்தபட்ச தகவல்களே பெறப்படுகின்றன என்றும், ஆதார் எண்ணை போலியாக உருவாக்க முடியாது என்றும் கையெழுத்தை கூட போலியாக போடலாம்.

கையெழுத்தை போலியாக்க முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது. ஆதார் சிறப்பானது என்பதை விட அதன் தனித்துவம் முக்கியமானது என்றும், சமுதாயத்தின் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு ஆதார் வலுவூட்டுவதுடன் அவர்களுக்கு ஒரு அடையாளத்தையும் அளிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டது.

மற்ற அடையாள அட்டைகளில் இருந்து ஆதார் முற்றிலும் வேறுபட்டது என்றும், ஆதார் அரசியல் சாசனத்திற்கு ஆதார் உட்பட்டது என்பதால் அதில் சிறு திருத்தங்கள் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.