ஆதார் எண் கட்டாயமா? இல்லையா? இன்று தீர்ப்பு

480

ஆதார் எண் கட்டாயமா? இல்லையா? என்பது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்தது.

மேலும் சிம் கார்டு, வங்கி கணக்கு உட்பட பல சேவைகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆதார் மூலம் தனி நபரின் விவரங்கள் திருடப்படும் அபாயம் உள்ளதால், ஆதார் அடையாள எண் அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை ஒத்திவைத்ததோடு, சிம் கார்டு, வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்க்கான காலக்கெடுவை நீட்டித்தது. இந்நிலையில், ஆதார் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of