மே 1-ம் தேதிக்குள் இது நடக்கும் – ஆதித்ய தாக்கரே அறிவிப்பு

343

மகாராஷ்டிராவில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி விட்டு வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தையில் இந்த பொருட்கள் இன்னும் விற்பனை செய்யப்படுகின்றன என காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர்
கூறினார்.

இதற்கு பதிலளித்த ஆதித்ய தாக்கரே, வருகிற மே 1-ஆம் தேதிக்குள் மகாராஷ்டிரா ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத மாநிலமாக மாறும் என்றும் இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் குளிர்பானங்களின் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of