தேர்தல் சீட்டுக்காக 6 கோடி வாங்கினார்! வேட்பாளரின் மகன் கெஜ்ரிவால் மீது குற்றச்சாட்டு!

422

மேற்கு டெல்லி மக்களவை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடுபவர் பால்பீர் சிங் ஜாஹர். இவரது மகன் உதய் ஜாஹர். இந்நிலையில் தன் தந்தை மேற்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுவதற்கான சீட்டை பெற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6 கோடி ரூபாய் பணம் செலுத்தியதாக உதய் ஜாஹர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உதய் ஜாஹர் கூறும்போது,

“என் தந்தை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் அரசியலில் இணைந்தார். தேர்தலில் சீட் பெற அவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6 கோடி ரூபாய் பணத்தை வாரி வழங்கினார். என் அப்பா பணம் வழங்கியதற்கு நம்பகத்தகுந்த ஆதாரமே நான் தான். ஜனவரியில் தான் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்திருக்கிறார்.

இதற்கு முன் அன்னா ஹசாரே இயக்கத்திலும் கூட என் அப்பா இருந்ததில்லை. அப்படியிருக்க ஏன் என் அப்பாவிற்கு மேற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. 6 கோடி பணம் செலுத்த என் அப்பா ஒப்புக்கொண்டதன் காரணமாகத் தான் சீட்டும் வழங்கப்பட்டது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் மகனே இவ்வாறு குற்றச்சாட்டு வைத்துள்ளது, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.