‘தனியார் மருத்துவமனை நடத்தத் தடை’ – முதலமைச்சர் அதிரடி உத்தரவு

1081

ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார்.

பதவியேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் இவர், தற்போது மீண்டும் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அரசின் ஆரோக்கிய ஸ்ரீ மருத்துவ அட்டை வைத்துள்ள ஏழைகளுக்கு, மருத்துவ செலவு ஆயிரம் ரூபாயை தாண்டினால் மற்ற செலவுகளை அரசே ஏற்கும் என தெரிவித்தார்.

இந்த திட்டம் மூலம் அறுவை சிகிச்சை செய்து கொள்வோரின் குடும்பத்தினருக்கு, நோயாளி குணம் அடையும் வரை மாதம் 5ஆயிரம் ரூபாய் நிதி உதவி செய்யப்படும் என்றார்.

ஆந்திர மாநில அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை அல்லது கிளினிக் நடத்தக் கூடாது என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement