சாலையிலேயே பிரசவம் பார்த்த சுகாதாரத்துறை உதவியாளர்கள்

455

ஆந்திராவில் நடு வழியில் குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணிக்கு சுகாதாரத்துறை பெண் உதவியாளர்கள் பிரசவம் பார்த்தனர்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள திருவூரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அப்போது நடு வழியில் பிரசவ வலி அதிகமாகவே அவர் வழியிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். சாலையில் அவருக்கு சுகாதாரத்துறை பெண் உதவியாளர்கள் பிரசவம் பார்த்தனர்.

இதனையடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இருவரும் பாதுகாப்பாக உள்ளனர்.