ஜெகன்மோகன் ரெட்டி கொடுத்த அதிர்ச்சி! கலக்கத்தில் இருக்கும் சந்திரபாபு நாயுடு!

1035

1884 ஆம் ஆண்டு நதி பாதுகாப்புச் சட்டத்தின், விதிமுறைகளின்படி, கிருஷ்ணா ஆற்றின் கரையோரம், 500 மீட்டருக்குள் எந்த கட்டுமான பணிகளும் நடைபெறக்கூடாது.

ஆனால், கிருஷ்ணா நதிக் கரையிலிருந்து 100 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் சந்திரபாபு நாயுடுவின் வீடு உட்பட 28 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால், அந்த கட்டிடங்களை இடிக்க ஆந்திரா அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்தநிலையில், ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான விஜயசாய் ரெட்டி, சந்திரபாபு நாயுடு தங்கி உள்ள இல்லம் ‘சட்டவிரோதமானது’.

ஆற்றின் கரையோரம் கட்டப்பட்டுள்ளதால், இடிப்பது மட்டும் ஒரே வழி. உடனடியாக அவர் வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of