“காத்துக்கு நான் எங்க போவேன்..” உயிரை பறித்த ரெண்டு ரூபாய்..! பரபரப்பு ஏற்படுத்திய கொலை..!

327

ஆந்திர மாநிலம் காக்கிநாடா புறநகர் பகுதியில் உள்ள வலசபாக்கா கிராமத்தை சேர்ந்த சூரிய நாராயண ராஜு என்பவர் அப்பகுதியில் உள்ள சாம்பா என்பவரின் சைக்கிள் கடையில் தனது சைக்கிளுக்கு காற்றடிக்க வந்துள்ளார்.

சைக்கிளுக்கு காற்றடித்ததற்கு 2 ரூபாய் கேட்டபோது, சூரிய நாராயண ராஜு காசு தராமல், சாம்பாவை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் சாம்பாவுக்கும், சூரியநாராயண ராஜுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த சாம்பாவின் நண்பர் அப்பாராவ், இரும்பு ராடால் சூரிய நாராயண ராஜுவை தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த சூரியநாராயண ராஜு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து சாம்பா மற்றும் அப்பாராவை போலீசார் கைது செய்தனர்.