ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்

72
aarumugasamy-commision doest not be banned

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து  ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் உண்மை தன்மை பற்றி விசாரணை நடத்த, ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக்கோரி  அப்போலோ நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசு சாராத மருத்துவர்களைக்கொண்ட சுந்தந்திரமான குழுவை நியமிக்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கைக்கு தீர்வு காணும் வரை, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்த ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று  அப்போலா மருத்துவமனை நிர்வாகம் மனுவில் கூறியுள்ளது.

இந்த வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆறுமுகசாமி ஆணையம் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என அப்போலோ தரப்பில் வாதிட்டது. அனைத்து தரப்பினரும் உரிய வாய்ப்பு அளிக்கப்பட்டு தாங்கள் விசாரிக்கிறோம் எனவும் ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள்,   இதுகுறித்து தமிழக அரசு, மற்றும் ஆறுமுகசாமி ஆணையம் வரும் வெள்ளிக்கிழமைக்கும் பதில் அளிக்க  உத்தரவிட்டனர்.