அதெல்லாம் பன்னமுடியாது! ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை வழக்கில் உத்தரவு!

355

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிராக அப்போலோ நிர்வாகம் வழக்கு ஒன்றை தொடர்ந்தது.

அதில், தங்கள் மருத்துவர்களை விசாரிக்க, 21 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிடவும், அதுவரை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க தடை விதிக்கவும் கோரியிருந்தது.

கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழக பொதுத்துறை, ஆறுமுகசாமி ஆணையம், சசிகலா ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர்.

நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. கடந்த மார்ச் 12 ஆம் தேதி தீர்ப்புக்கான தேதி குறிப்பிடப்படாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of