இதனால் தான் நடிப்பதில்லை.. அப்பாஸ் கூறிய காரணம்.. ரசிகர்கள் வியப்பு..

1599

90-களின் காலகட்டத்தில் மிகப்பெரிய சாக்லேட் பாயாக வலம் வந்தவர் அப்பாஸ். என்ன தான் அழகாக இருந்தாலும், பல்வேறு திரைப்படங்களில் இரண்டாவது கதாநாயகனாகவே இவர் நடித்து வந்தார்.

இதையடுத்து, திருட்டுப் பயலே என்ற படத்தில், மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்த அப்பாஸ், அதற்காக பலரது பாராட்டுகளை பெற்றார். ஆனால், அந்த படத்தைத் தொடர்ந்து, இதுவரை வேறு எந்த படத்திலும், அவர் நடிக்கவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்த அவர், சினிமாவில் இருந்து விலகியதற்காக காரணம் பற்றி தெரிவித்துள்ளார்.

அதில், தன்னை வியக்க வைக்கும் அளவுக்கு எந்த கதையும் வரவில்லை எனவும், நாளுக்கு நாள் நடிப்பு மிகவும் போர் அடித்து விட்டதால் சினிமாவை விட்டு விலகி தற்போது தன்னுடைய குடும்பத்துடன் நல்லபடியாக இருக்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement