அபிநந்தன் தொடர்பான வீடியோக்களுக்கு தடை.., மத்திய அரசு அதிரடி

589

இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டியடிக்கும் முயற்சியின் போது பாகிஸ்தான் வசம் சிக்கிக் கொண்டார்.

இந்த நிலையில் அவர் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன. இதன் காரணமாக அபிநந்தனை நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

முன்னதாக காயத்துடன் அபிநந்தன் நிற்பது போன்றும் , அவரை பாகிஸ்தான் அதிகாரிகள் கேள்வி கேட்பது போன்றும் வீடியோக்களை பாகிஸ்தான் வெளியிட்டிருந்தது. இது ஜெனீவா விதிகளுக்கு புறம்பானது என இந்தியா குற்றம்சாட்டி வந்தது.

இந்த வீடியோக்கள் youtube, சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. இதையடுத்து அபிநந்தன் தொடர்பான 11 வீடியோக்களை youtube நிறுவனம் நீக்குமாறு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of